குடியாத்தம் | டிசம்பர் 22
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கொண்டசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
குடியாத்தம் கஸ்பா பகுதியைச் சேர்ந்த விக்ரம் (28), தந்தை ஸ்ரீதர், சமூக நீதி விடுதியின் கூடுதல் கட்டிடம் கட்டும் பணியில் எலக்ட்ரீஷனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்று காலை 11.30 மணியளவில், பணியின்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
அவரை உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த விக்ரமின் உடல் உடற்கூறு ஆய்விற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குடும்ப நிலை:
இறந்த விக்ரமுக்கு,
மனைவி சந்தியா (23),
யாஷிகா (4) என்ற பெண் குழந்தையும்,
கவின் (1½) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
இளம் வயதில் குடும்பத்தின் ஒரே ஆதாரமான விக்ரம் உயிரிழந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்