Sat. Jan 10th, 2026

குடியாத்தம், டிசம்பர் 19:
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றும் போது RC உயிர் தியாகம் செய்த முருக பக்தர் பூரண சந்திரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டி,
குடியாத்தம் இந்து முன்னணி சார்பில்
குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே
மோட்ச தீபம் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் அனீஷ் தலைமை தாங்கினார்.
ஆறுமுகம், யுவசங்கர் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தனர்.

இதில், குடியாத்தம் நகர தலைவர் குமார் வீர வணக்கம் கோஷங்களை எழுப்பினார்.
மேலும், நகரம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்
புகழேந்தி, சுஜித், லோகேஷ், மணி, ஜெகன், பலராமன், ஆனந்த், லோகு, சங்கர், கோகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS