Sat. Jan 10th, 2026

கடத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் செயல் திட்ட கூட்டம்

கடத்தூர் கிழக்கு ஒன்றியம் | டிசம்பர் 18

தருமபுரி மேற்கு மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி (60) உட்பட்ட கடத்தூர் கிழக்கு ஒன்றியம்,
குருபரஹள்ளி ஊராட்சி வாக்குச் சாவடி எண் 168, 169 ஆகிய இடங்களில்
“என் வாக்குச் சாவடி – வெற்றி வாக்குச் சாவடி”
என்ற தலைப்பில் பரப்புரை செயல் திட்ட கூட்டம் 18.12.2025 அன்று நடைபெற்றது.

தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் (M.Sc., Ph.D.) அவர்கள் முன்னிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்த செயல் திட்ட கூட்டத்திற்கு கடத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் த. நெப்போலியன் அவர்கள் தலைமை வகித்தார்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்:

ரமேஷ், மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை செயலாளர்

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள்
ரமணி, காந்தி, நித்யா இளவரசன்

மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பார்த்திபன்

குப்புசாமி, சார்லஸ், பாண்டு, ஜெகநாதன், ஞானம், காமராஜ்

இளைஞரணி நிர்வாகிகள்

BLA-2, BDA, BLC பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர்

தீர்மானம்:

கூட்டத்தில்,
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி மீண்டும் அமைய,
“என் வாக்குச் சாவடி – வெற்றி வாக்குச் சாவடி” என்ற குறிக்கோளை முழுமையாக செயல்படுத்துவது,
ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கழக அரசின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை பிரச்சாரம் செய்து அதிக வாக்குகள் பெற்றுத் தருவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மண்டல செய்தியாளர்
D. ராஜீவ்காந்தி
தமிழ்நாடு டுடே

By TN NEWS