தமிழ்நாடு டுடே இதழ், தமிழகத்தில் அனைத்து துறைகள், அனைத்து நிலை அதிகாரிகள் வரை நேரடியாகச் சென்று வழங்கப்படும் ஒரு பொறுப்பான, சமூக அக்கறை கொண்ட ஊடகமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தாலுகா அலுவலகங்கள், மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், அரசுத் துறை அலுவலகங்கள், தலைமை அலுவலகங்கள் என நிர்வாகத்தின் அனைத்துத் தரப்புகளிலும் தமிழ்நாடு டுடே இதழ் நேரில் வழங்கப்படுகிறது. இதன் மூலம், மக்களிடமிருந்து எழும் சமூக கோரிக்கைகள், பொதுநலப் பிரச்சினைகள் மற்றும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
அதேபோன்று, தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் இடமும் தமிழ்நாடு டுடே செய்தி தொடர்பாளர்கள் நேரில் சென்று இதழை வழங்கி வருகின்றனர். இதனால், மக்கள் நலன் சார்ந்த செய்திகள் நேரடியாக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் ஒரு வலுவான தொடர்பு பாலமாக தமிழ்நாடு டுடே செயல்படுகிறது.
தேனி மாவட்டம் – சின்னமனூரில் தமிழ்நாடு டுடே இதழ் நேரடி விநியோகம்;
தேனி மாவட்டம், சின்னமனூர் :
தமிழ்நாடு டுடே இதழின் டிசம்பர் மாதப் பதிப்பு, தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களில் நேரடியாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு டுடே மாவட்ட தலைமை நிருபர்கள் திரு. R. கண்ணன் மற்றும் திரு. அன்பு பிரகாஷ் முருகேசன் ஆகியோர் நேரில் சென்று இதழ் பிரதிகளை வழங்கினர்.
விநியோகிக்கப்பட்ட இடங்கள்:
அரசு பொது மருத்துவமனை – மருத்துவ அதிகாரிகளிடம்,
தீயணைப்பு நிலையம் – நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்களிடம்,
ஸ்ரீ கிருஷ்ணா ஐயர் மேல்நிலைப்பள்ளி – பள்ளித் தலைமை ஆசிரியரிடம்,
வனச்சரக அலுவலகம் – அலுவலக பணியாளர்களிடம்,
குட்சாம் (Goodsam) மருத்துவமனை – தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம்,
செய்தி மட்டும் அல்ல… தீர்வை நோக்கிய ஊடகம்:
தமிழ்நாடு டுடே, செய்திகளை வெளியிடுவதுடன் மட்டுமல்லாமல்,
✔ சமூக கோரிக்கைகள் அதிகாரிகளின் கவனத்திற்கு செல்வதை உறுதி செய்தல்,
✔ மக்கள் – நிர்வாகம் இடையே நேரடி தொடர்பை உருவாக்குதல்,
✔ பொறுப்பான, ஆதாரத்துடன் கூடிய செய்தியளிப்பு
என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாடு டுடே இன்று மக்களுக்கான ஊடகம், நிர்வாகத்துடன் உரையாடும் ஊடகம் என்ற அடையாளத்தைப் பெற்றுள்ளது.



செய்தி தொடர்பாளர்
அன்பு பிரகாஷ் முருகேசன்
தேனி மாவட்ட தலைமை செய்தியாளர் & புகைப்படக் கலைஞர்
