குடியாத்தம், டிசம்பர் 11:
குடியாத்தம் நெல்லூர் பேட்டை அருகே உள்ள புத்தர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குடியாத்தம் நகர காவல்துறை நேற்று விசேஷ சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அந்நேரத்தில், அப்பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (22) கஞ்சா விற்பனை செய்துக்கொண்டிருந்ததை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
பிரசாந்திடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 200 கிராம் கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பிரசாந்த் மீது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்