


வடசென்னை
08.12.2025
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும்
“சங்கதன் ஸ்ரீஜன் அபியான்”
வடசென்னையில் தீவிர செயல்பாடு
அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்துடனும், கட்சியில் முறையாக பணியாற்றும் மாவட்ட தலைவர்களை நியமிக்கும் நோக்கத்துடனும் “சங்கதன் ஸ்ரீஜன் அபியான்” திட்டம் தொடங்கப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் கட்சி பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ராமச்சந்திரா குன்ஷியா, வடசென்னையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ச்சியாக பல்வேறு கலந்தாய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடனான முக்கிய கலந்தாய்வு கூட்டம், கொடுங்கையூர் – எம்.ஆர். நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டம் 1-ஆம் சர்க்கிள் தலைவர் பீர்முகமது அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சி பார்வையாளர் ராமச்சந்திரா குன்ஷியா,
வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஜெ. டெல்லிபாபு,
மற்றும் வடசென்னை பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியை அடித்தள மக்களிடம் மேலும் வலுப்படுத்துவது, அமைப்பு ரீதியான கட்டமைப்புகளை விருத்தி செய்வது, எதிர்வரும் தேர்தல் பணிகளை திட்டமிடுவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
சென்னை மாவட்ட செய்தியாளர்
தமிழ்நாடு டுடே
எம். யாசர் அலி
