Fri. Dec 19th, 2025


குடியாத்தம், டிசம்பர் 5:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில், டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டாட்சியர் கே. பழனி தலைமை தாங்கினார்.

அதிகாரிகள் பங்கேற்பு:

வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை

துணை வட்டாட்சியர் மஞ்சுநாதன் வரவேற்பு

பல துறைகளின் அதிகாரிகள் மொத்தம் 13 பேர் பங்கேற்பு


விவசாய சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்:

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பல முக்கிய பிரச்சனைகளை முன்வைத்தனர்:

1. 18 மாதங்களாக நீடிக்கும் குடிநீர் பிரச்சனை:

சேம் பள்ளி ஊராட்சி, உப்பரபள்ளி பகுதியில் கடந்த 18 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக, பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

2. மார்க்கெட் சுங்க விலைகுறிப்பை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க கோரிக்கை:

குடியாத்தம் தினசரி சந்தையில் சுங்கம் வசூலிக்கும் பணியாளர்கள், அதிக கட்டணம் வசூலிப்பதாக விவசாயிகள் முறையிட்டனர்.
நகராட்சி வசூல் செய்யும் அதிகாரப்பூர்வ விலைப்பட்டியல் பொதுமக்கள் காணும் வகையில் வெளிப்படையாக வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

3. சர்வே துறையில் மனைகள் அளவிட தாமதம்:

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தின் சர்வே பிரிவில்,
வீட்டு மனைகள் அளவிடுவதில் 9 மாதங்களாகவும் தாமதம்
பொதுமக்களை அலையவைத்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். உடனடி ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.

4. பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு:

உள்ளி ஊராட்சியில் உள்ள மூன்று பாசன கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால்,

நீர்வரத்து பாதிப்பு:

விவசாயத்துக்கு நேரடி இழப்பு நடந்துவருகிறது. அத்தாக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என கோரினர்.

வட்டாட்சியரின் உறுதி:

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து வட்டாட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாய சங்கங்களுக்கு உறுதி அளித்தார்.

பங்கேற்ற பிற அதிகாரிகள்:

வட்ட வழங்கல் அலுவலர் – தி.செ. திவ்யா பிரணவம்

பொதுப்பணித்துறை நீர்வளம் – சிவாஜி

வனத்துறை – சுரேஷ்

மண்வளம் அலுவலர் – சத்யபிரியா

மின் பொறியாளர் – உமா பிரியா

முதுநிலை வருவாய் அலுவலர் – எழிலரசி
உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS