Sat. Dec 20th, 2025

 

திருப்பதி / ஹைதராபாத் – டிசம்பர் 3, 2025

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தலைவர் ஸ்ரீ பி.ஆர். நாயுடு, புதன்கிழமை ஹைதராபாத்தில் உள்ள கௌரவ தெலங்கானா ஆளுநர் ஸ்ரீ ஜிஷ்ணு தேவ் வர்மா அவர்களை அவரது பங்களாவில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

TTD தலைவருக்கு சால்வை மற்றும் தீர்த்த பிரசாதம் வழங்கி சிறப்பு மரியாதை, இந்த சந்திப்பின் போது ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா:

TTD தலைவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார், திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கினார்

TTD சேவைகளுக்கு ஆளுநரின் பாராட்டு.

ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா, TTD வழங்கி வரும் சேவைகளுக்குப் புகழாரம் சூட்டினார்:

பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னபிரசாதம் சுவையானதும் உயர்தரமானதும் ஸ்ரீவாரி தரிசனத்திற்காக TTD வழங்கும் வசதிகள் சிறப்பாக உள்ளன. உலகின் அனைத்து பக்தர்களுக்கும் TTD அளிக்கும் சேவை ஒரு மகத்தான புனித பணியாக இருப்பதாக அவர் பாராட்டினார்

திரிபுராவில் ஸ்ரீவாரி கோயில் – ஆளுநரின் கோரிக்கை

சந்திப்பு வேளையில், ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா:

“என் சொந்த மாநிலமான திரிபுராவில் ஒரு ஸ்ரீவாரி கோயில் கட்ட TTD முன்வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த TTD தலைவர் பி.ஆர். நாயுடு:

“திரிபுராவில் அரசு நிலம் ஒதுக்கினால், அங்கு ஸ்ரீவாரி கோயில் கட்டுமானத்தை TTD மகிழ்ச்சியுடன் மேற்கொள்ளும்”
என்று தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு அதிகாரி – தமிழ்நாடு டுடே

By TN NEWS