


குறைந்தபட்ச ஊதியம் – நிரந்தரப்படுத்தல் கோரி மனு வழங்கல்;
டிசம்பர் 2 – தென்காசி மாவட்டம்.
தென்காசி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர் காவலர்களுக்கு நீதி கேட்டு, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இன்று கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டம் AICCTU – தென்காசி மாவட்ட ஜனநாயக தூய்மை பணியாளர் காவலர்கள் சங்கத்தின் சார்பில், மாவட்ட பொதுச் செயலாளர் ஜெ. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
👥 பங்கேற்றோர் & முன்னிலை வகித்தோர்:
மாவட்ட கொளரவத் தலைவர் E. மாரியம்மாள்
மாவட்ட நிர்வாகிகள்: கண்ணன், சின்னத்தம்பி, சுந்தரேசன், மாயாண்டி, சக்திவேல், அரிகரன்
கண்டன சிறப்புரை: M. வேல்முருகன் (AICCTU மாவட்டத் தலைவர்) M. வேலு, கருப்பையா, P. முத்துலெட்சுமி, M. தங்கம், M. இராமர்பாண்டியன் CPI-ML மாவட்ட குழு உறுப்பினர்கள்
இந்தக் கண்டனப் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண் தூய்மை பணியாளர்கள் உட்பட மொத்தம் 78 பேர் பங்கேற்றனர்.
📜 அதிகாரிகளிடம் மனு வழங்கல்:
போராட்டத்தின்போது தூய்மை பணியாளர் காவலர்கள்:
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்,
தென்காசி மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநர்
ஆகியோரிடம் கோரிக்கை மனுவை நேரடியாக வழங்கினர்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் பதிவு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
📢 போராட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள்:
தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்
அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண்டும்
தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
என பல்வேறு கோஷங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டன.
தூய்மை பணியாளர் காவலர்களின் முக்கிய கோரிக்கைகள்:
குறைந்தபட்ச ஊதியம் வழங்கல்:
தமிழக அரசின் அரசாணை 62-ன் படி, கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர் காவலர்களுக்கு மாதம் ரூ.12,792 வழங்க வேண்டும்.
அனைத்து பணியாளர்களையும் நிரந்தரப்படுத்தல்:
நீண்ட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர் காவலர்களை நிரந்தரமாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தகவல் வழங்கியவர்:
அமல் ராஜ்
தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்
தமிழ்நாடு டுடே
