ராமேஸ்வரம் ராமர் பாதம் செல்லும் வழியில் அமைந்துள்ள அரசு தங்கும் விடுதியில், கணவன்–மனைவி இடையேயான குடும்ப தகராறு துயர சம்பவமாக மாறி, மனைவி கொலை செய்யப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரமக்குடி பகுதியில் வசிக்கும் கார்மேகம் (64) மற்றும் அவரது மனைவி கஸ்தூரி (48), இருவரும் ராமேஸ்வரம் அரசு தங்கும் விடுதியில் காவலாளிகளாகப் பணியாற்றி வந்தவர்கள்.
செவ்வாய்க்கிழமை இரவு, இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகராறு மேலும் தீவிரமடைந்த நிலையில், ஆத்திரமடைந்த கார்மேகம் கத்தியால் மனைவி கஸ்தூரியை பல இடங்களில் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் தகவல் கிடைத்தவுடன், ராமேஸ்வரம் நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ரத்த குளத்தில் கிடந்த கஸ்தூரியின் உடலை மீட்டனர். உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
கொலை செய்த கார்மேகம் காவலில் எடுக்கப்பட்டு, குடும்ப தகராறின் சரியான காரணம், பின்னணி தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அரசு தங்கும் விடுதிக்குள் இப்படியான கொடூர சம்பவம் நிகழ்ந்தது, ராமேஸ்வரம் மற்றும் சுற்றுப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட செய்தியாளர்
செந்தில்குமார்
