ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கடத்திய கஞ்சா பறிமுதல் – கண்டெய்னர் லாரி கைப்பற்றப்பட்டது; 2 பேர் கைது!
குடியாத்தம், நவம்பர் 19:
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனம் அவர்களின் உத்தரவைத் தொடர்ந்து, ஆந்திரா–தமிழக எல்லையான பரதராமி சோதனைச் சாவடியில் இன்று போலீசார் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, ஆந்திராவிலிருந்து குடியாத்தம் நோக்கி வந்த ஒரு கண்டெய்னர் லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் போது, டிரைவர் இருக்கையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 கிலோ கஞ்சா போலீசாருக்கு கிடைத்தது.
கைது செய்யப்பட்டவர்கள்:
பாபு (32) – லாரி டிரைவர், அனுப்புண்டி, மதுரை மாவட்டம்
ராஜ்குமார் (25) – லாரி கிளீனர், திருப்புவனம், சிவகங்கை மாவட்டம்
இருவரும் கைது செய்யப்பட்டதுடன், கஞ்சா மற்றும் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட கண்டெய்னர் லாரியும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்:
கே.வி. ராஜேந்திரன்
