Thu. Nov 20th, 2025

தர்மபுரி மாவட்டத்தில் பத்திரிகையாளர் தின விழா – சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.

பத்திரிகையாளர்கள் உலகெங்கிலும் ஜனநாயகத்தின் காவலர்களாக சமத்துவத்துடனும் சமூகப் பொறுப்புடனும் பணியாற்றி வருவதைக் கௌரவிக்கும் நாளே பத்திரிகையாளர் தினம். இந்த சிறப்புமிக்க நாளை முன்னிட்டு நாடு முழுவதும் விழாக்கோலம் நிலவியது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், உலகெங்கும் உழைக்கும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேபோல், செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள், ஜனநாயக சுமையைச் சுமந்து, உண்மையை வெளிப்படுத்தும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளை வழங்கினார்.

தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு நிகழ்வு:

தர்மபுரி மாவட்டத்திலும் பத்திரிகையாளர் தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
தகவல் டுடே செய்தி நாளிதழின் சார்பாக, மாவட்ட செய்தியாளர் மேரி, மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சந்தித்து தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியரும் இந்த நாளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சமூக நலனுக்காக பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு தனது பாராட்டையும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேரி அவர்கள் இந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பத்திரிகையாளர் தின மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இவரது சமூக அக்கறை மற்றும் ஒத்துழைப்பை பொதுமக்கள் பாராட்டினர்.

இந்த விழாவை சிறப்பாக நடத்த உதவிய,

மாவட்ட ஆட்சியர்,

தகவல் டுடே நாளிதழ் நிறுவனம்,

மற்றும் இதில் பங்கேற்ற அனைவருக்கும்

தகவல் டுடே செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர் குடும்பம் சார்பில் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

மண்டல செய்தியாளர்
D. ராஜீவ் காந்தி

By TN NEWS