Wed. Nov 19th, 2025


நெல்லையில் வெள்ளம்: 1992-ஐ மீண்டும் நினைவூட்டும் இயற்கை கோபம்!

நெல்லை மாவட்டம்.
1992 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாமிரபரணி கண்மூடித்தனமாக எழுந்து ஆடிய அந்த இரவு…
34 ஆண்டுகள் கடந்தும், அந்த பயங்கர வெள்ள இரவு, அதை கண்ட மக்களின் மனதில் இன்னும் அழியாமல் நிற்கிறது.

1992 – நவம்பர் 13: வரலாற்று வெள்ள தினம்.

அன்று உருவான புயல் நெல்லை மலைவாரப் பகுதிகளில் அபூர்வமாக கனமழையை கொட்டியது.

பாபநாசம் அணை – 310 mm

சேர்வலாறு – 210 mm

பாபநாசம் கீழ் அணை – 190 mm

மணிமுத்தாறு அணை – 260 mm

அருவி போல் கொட்டிய இந்த மழை காரணமாக மூன்று அணைகளிலும் கட்டுக்கடங்காத காட்டு வெள்ளம் பாய்ந்தது. அணை உடையும் அபாயம் நொடிப்பொழுதுகளில் அதிகரித்தது.

நள்ளிரவு… எந்த முன்னறிவிப்பும் இன்றி!

அணைகள் உடைந்து பேரழிவு ஏற்படலாம் என பயந்த அதிகாரிகள்,
நள்ளிரவிலேயே முன்னறிவிப்பு இன்றி
3 அணைகளையும் திறக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கினர்.

இதனால் ஒரு கணத்தில் 2,00,000 கனஅடி நீர் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து வேகமாக பாய்ந்தது.

மேலும், அதே சமயத்தில் நெல்லை மாவட்டமெங்கும் பெய்த கனமழையையும் சேர்த்து தாமிரபரணி ஆற்றில் 2.04 லட்சம் கனஅடி நீர் திடீரென வெள்ளமாக பாய்ந்தது.

கரையோரம் முழுவதும்… உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலை!

பாபநாசம் முதல் காயல்பட்டினம் கடலோரம் வரை
கரையை ஒட்டியிருந்த குடியிருப்புகள், வீடுகள், சிறிய கடைகள் எல்லாம் கண்முன்னே நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் பகுதிகளில்
வீடுகள் முழுவதும் நீரில் ஆழ்ந்தன.
அன்று, மக்கள் “உயிர் மட்டும் காப்பாற்றிக் கொண்டால் போதும்” என்ற நிலை.

2025… அதே இருள், அதே அதிர்ச்சி மீண்டும்!

இன்று (2025) வரலாறு காணாத கனமழையால் நெல்லை மீண்டும் தண்ணீரால் சூழப்பட்ட தனித்தீவு போல தோன்றுகிறது.

நதிகள் நிரம்பிச் சுழற்றி, வீடுகள் மூழ்கி, மக்கள் மீண்டும் 1992 ஐ நினைவுகூரும் நிலை.
அதை நேரில் கண்டவர்கள் இன்று கூட பேசும் போது கண்களில் நீர் தேங்குகிறது.

🔴  34 ஆண்டுகள் கடந்தாலும்…

🔳   அந்த இரவு இன்னும் நெல்லையின் நெஞ்சில்!

1992 வெள்ளத்தின் சுவடுகள், நெல்லை மக்களின் நினைவில்
இன்றும் அழியாத காயங்களாகவே உள்ளது.
இன்றைய நிலை மீண்டும் அதே பயத்தை, அதே நினைவுகளை உயிர்ப்பிக்கிறது.

✒️ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்

♦️  1992ல் நெல்லையை அழித்த வரலாற்று வெள்ளத்தின்   சுவடுகள்…!
♦️   34 ஆண்டுகள் கடந்தும், அதே பயத்தை 2025 மீண்டும் நினைவூட்டுகிறது!

By TN NEWS