Mon. Jan 12th, 2026



நவம்பர் 14 — குடியாத்தம்

நடைபெற்று முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மாபெரும் வெற்றி பெற்றதை முன்னிட்டு, குடியாத்தம் நகர பாரதிய ஜனதா கட்சியினர் இன்று கொண்டாட்ட நிகழ்வை நடத்தினர்.

குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில், நகர பாஜக சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர தலைவர் திரு. M. K. ஜெகன் அவர்கள் தலைமையேற்றார்.

கலந்து கொண்ட நிர்வாகிகள்:

மாவட்ட நிர்வாகிகள் :
ஸ்ரீகாந்த், வாகீஸ்வரன், ஹரி கிருஷ்ணன், சுசில், ரங்கநாதன், சுரேந்தர், மஞ்சு கோவிந்தராஜ், ஸ்ரீதர், ஸ்ரீதேவி

நகர நிர்வாகிகள் :
சிவன், கமலஹாசன், ஜோதி சுந்தர், நித்யானந்தம், மணிகண்டன், கணேசன், ராஜா, வாசு, பாஸ்கர்

பலரும் கலந்து கொண்டு NDA வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.

செய்தியாளர்: கே. வி. ராஜேந்திரன்

குடியாத்தம் தாலுகா

By TN NEWS