Wed. Nov 19th, 2025

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஹைராத்துல் ஜமாலியா கீழ் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில், இன்று பள்ளிக்கல்வித்துறையின் மூலம் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில்:

மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் (இ.ஆ.ப.)

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி

திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் ராம். கருமாணிக்கம்

ஆகியோர் முன்னிலை வகித்தனர்:

வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் தலைமையேற்று மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி உரையாற்றினார்.

மிதிவண்டி வழங்கப்பட்ட விவரம்:

இன்று 10 பள்ளிகளை சேர்ந்த:

மாணவர்கள் – 875

மாணவிகள் – 868

மொத்தம் – 1,743 பேருக்கு

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு துவக்கி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாநில மாணவ–மாணவிகளுக்கும் அவர்களது பள்ளிகளில் நேரடியாக மிதிவண்டிகள் வழங்கப்படும்.

மொத்தமாக 10,912 மாணவ, மாணவிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர்.

தமிழக அரசின் கல்வி நலத் திட்டங்கள், மாணவர்களுக்கு பேருதவி.

அமைச்சர் தனது உரையில் தெரிவித்ததாவது:

மாணவர்கள் பள்ளிக்கு வர எளிதாகவும், சீரான கல்வியை தொடரவும் இந்த மிதிவண்டிகள் பெரிதும் உதவி செய்கின்றன.

புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன், தவப்புதல்வன், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல முக்கிய கல்வித் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன.

இந்த திட்டங்கள் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியானவை.

முதலமைச்சர் உருவாக்கிய கல்வித் திட்டங்களை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி, உயர்கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் அவர் ஊக்கமளித்தார்.

கலந்து கொண்டவர்கள்:

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் – ரெஜினி

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் – ராஜா

பரமக்குடி நகர்மன்ற தலைவர் – சேது கருணாநிதி

மாவட்ட கல்வி அலுவலர் – சங்கர்

நகர்மன்ற உறுப்பினர் – ஜெயபாரதி

பள்ளித் தாளாளர் – அஜ்மல் கான்

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: செந்தில்குமார்

ஒளிப்பதிவாளர்: இராமச்சந்திரன்

இராமநாதபுரம் மாவட்டம்

By TN NEWS