சின்னமனூர் | நவம்பர் 14, 2025.
உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம் சின்னமனூரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவை செய்து வரும் Good Sam Medical Centre இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டதது. இந்த முகாம் அகமுடையார் உறவின்முறை மண்டபத்தில் நடைபெற்றது.
பங்கேற்ற மருத்துவர்கள்:
டாக்டர் சிவ பிரகாஷ்
டாக்டர் ஹரி தங்கம்
டாக்டர் ஜெனிஃபஸ் சாமுவேல்
டாக்டர் ஷெரா பென்
அத்துடன், அரவிந்த் கண் மருத்துவமனை – தேனி
மற்றும் Children Charitable Trust நிறுவனங்களும் இணைந்து சேவையாற்றின.
முகாமில் வழங்கப்பட்ட இலவச சேவைகள்:
பொது மருத்துவம், சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை
மகளிர் மருத்துவம்
கண் பரிசோதனை
உணவியல் & ஊட்டச்சத்து நிபுணர் ஆலோசனை
இலவச Blood Sugar சோதனை
BP, Pulse, Temperature, Oxygen, Height, Weight போன்ற அடிப்படை பரிசோதனைகள்
தனிப்பட்ட Diet Chart வழங்கப்பட்டது
பொதுமக்களுக்கு அழைப்பு:
சின்னமனூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள்
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஆரோக்கிய பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
செய்தி தொடர்பு
மு. அன்பு பிரகாஷ்
தேனி மாவட்ட தலைமை புகைப்பட கலைஞர்


