தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பட்டுகோனம்பட்டி ஊராட்சி ஆலமரத்தூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு இதுவரை சுடுகாடு இல்லாததால் நீண்டகால பிரச்சினை நிலவி வந்தது.
முன்னதாக அவர்கள் பயன்படுத்தி வந்த சுடுகாடு நிலம், நீர்நிலை புறம்போக்கு நிலம் எனக் குறிப்பிடப்பட்டதால், அங்கு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் இணைந்து தொடர்ந்து போராடி வந்தனர்.
இதன் விளைவாக, கடந்த 10.11.2025 அன்று அரூர் ஆர்.டி.ஓ தலைமையில் மாற்று அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டு, இன்று (12.11.2025) அந்த நிலத்தை அளக்கும் பணி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாப்பிரெட்டிப்பட்டி வட்ட செயலாளர் தோழர் தி.வ.தனுஷன், மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகி தோழர் கண்ணகி, வாலிபர் சங்க வட்டத் தலைவர் குப்பன், மலைவாழ் மக்கள் சங்க வட்ட செயலாளர் தோழர் வரதராஜன், தோழர் ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
📰 மண்டல செய்தியாளர்: டி. ராஜீவ்காந்தி