குடியாத்தம் (நவம்பர் 12):
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள கொண்டசமுத்திரம் ஊராட்சி, சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 40,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மிகப் பெரிய ஊராட்சியாகும்.
இந்த ஊராட்சியில் உள்ள சக்தி நகர், கிருஷ்ணா கார்டன், வள்ளலார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், இன்று காலை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சி.பி.எம் நகரச் செயலாளர் வி. குபேந்திரன் தலைமை தாங்கினார்.தாலுக்கா செயலாளர் எஸ். சிலம்பரசன் முன்னிலை வகித்தார்.கோரிக்கைகளை வலியுறுத்தி
மாவட்டச் செயலாளர் எஸ்.டி. சங்கரி,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. காத்தவராயன், கே. சாமிநாதன், எஸ். ஏகலைவன்,குடியாத்தம் தொகுதி மற்றும் பேர்ணாம்பட்டு தாலுக்கா செயலாளர் சி. சரவணன்,மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. குணசேகரன், கே. செம்மலர்
ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம், விரைவில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பின்னர் ஆர்ப்பாட்டம் கலைந்தது.
📸 செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுக்கா செய்தி
