Wed. Nov 19th, 2025



தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த பால்பாண்டி (60) என்பவர் சீலையம்பட்டியில் குத்தகைக்கு வாங்கிய வயலில் நெல் விவசாயம் செய்து வந்தார். சமீபத்தில் அறுவடை முடிந்து, நெல் கதிர்களை வயலில் வைத்து பாதுகாத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை, வயலில் இருந்தபோது ஹெல்மெட் அணிந்த இரு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து, பால்பாண்டியை கழுத்தில் குத்தியும், வக்கில் வெட்டியும் கொலை செய்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி குமுளி–தேனி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அறிவிப்பு கிடைத்ததும் சின்னமனூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அதன் பின் மறியல் கைவிடப்பட்டது.

பால்பாண்டியின் உடல் கைப்பற்றப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சின்னமனூர் காவல் துறையினர் கொலை வழக்கில் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளைத் தேடும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

காலை நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

செய்தி தொடர்பு:
மு. அன்பு பிரகாஷ்
தேனி மாவட்ட தலைமை புகைப்பட கலைஞர்

By TN NEWS