Wed. Nov 19th, 2025



தருமபுரி மாவட்டம், அரூர்:
மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக பசுமை பாதுகாப்பு கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் பசுமை சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


“தமிழகத்தின் அனைத்து அரசுடைமை மற்றும் தனியார் வங்கிகளிலும் பெண்களுக்கு தனியாக கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். தற்போது பல வங்கிகளில் கழிப்பறைகள் பணியாளர்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பெண்கள் சுய உதவி குழுக்கள், கர்ப்பிணிகள், சிறுவர் உடன் வரும் பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் தினமும் வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு, தமிழக நிதியமைச்சர் மற்றும் முதலமைச்சர் அனைத்து வங்கிகளுக்கும் கட்டாயமாக பொதுப் பயன்பாட்டு கழிப்பறை வசதி ஏற்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,” எனக் கோரிக்கை வைத்தார்.

அதே நேரத்தில், சமூக சமத்துவம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்:
“அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டம் வரவேற்கத்தக்கது. அதேபோல அனைத்து சாதியினரும் முதல்வராகும் உரிமை பெற வேண்டும். ‘எல்லோருக்கும் எல்லாம் உங்களுடன் ஸ்டாலின்’ என்ற கோஷத்துக்கேற்ப, அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்குள் பல்வேறு சாதியினரும் தமிழக முதல்வராக வாய்ப்பு பெறும் வகையில் சட்டம் கொண்டுவரலாம்,” என சமூக ஆர்வலரும் உலக பசுமை பாதுகாப்பு கட்சியின் தலைவர் டாக்டர் பசுமை சீனிவாசன் தெரிவித்தார்.

செய்தி: பசுபதி

By TN NEWS