வேலூர், நவம்பர் 7 —
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று ரோட்டராக்ட் கிளப் ஆஃப் விஐடியின் சாசனம் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜே. கே. என். பழனி மற்றும் வருங்கால மாவட்ட ஆளுநர் டி. சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
ரோட்டராக்ட் மாவட்டச் சேர்மன் ஹரி, சதாக்ஷி, தினேஷ், மற்றும் கோபிநாத் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு புதிய கிளப்பின் தொடக்கத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, விஐடி பல்கலைக்கழகம் மற்றும் ரோட்டரி அமைப்பு இடையே ஒப்பந்தம் (MOU) கையெழுத்தாகி, மாணவர்களில் தலைமைத்துவம், புதுமை, மற்றும் சமூகப் பணியாற்றும் மனப்பாங்கை வளர்க்கும் நோக்கில் புதிய ஒத்துழைப்புக்கு துவக்கம் வைக்கப்பட்டது.
விழாவின் இறுதியில், முதன்மை மற்றும் சிறப்பு விருந்தினர்கள் புதிய ரோட்டராக்ட் உறுப்பினர்களுக்கு பதக்கங்களை அணிவித்து அவர்களை அதிகாரப்பூர்வமாக வரவேற்றனர்.
இந்த நிகழ்வை பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் ரோட்டரி அமைப்பினரின் பெரும் பங்கேற்புடன் சிறப்பாக நிறைவு செய்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே. வி. ராஜேந்திரன்
