நவம்பர் 4 — வேலூர் மாவட்டம், குடியாத்தம்
சுமார் ரூ.1.63 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட குடியாத்தம் சார் பதிவாளர் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க. உதயநிதி அவர்கள், காணொளி காட்சி மூலம் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று மாலை 4.00 மணியளவில், வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலட்சுமி அவர்கள் அலுவலகத்தை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன், நகராட்சி தலைவர் எஸ். சௌந்தர்ராஜன், வட்டாட்சியர்கள் கே. பழனி ராஜ்குமார், நகர மன்ற உறுப்பினர்கள், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இறுதியில் சார் பதிவாளர் சேகர் நன்றி தெரிவித்தார்.
செய்தி:
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
