Wed. Nov 19th, 2025



நெல்லை மாவட்டம், நவம்பர் 2:
நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்க அறப்போர் இயக்கம் சார்பில் இன்று கொக்கிரகுளம் பகுதியில் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, கல்குவாரி உரிமையாளர் சங்கத்துக்கு ஆதரவான சிலர் திடீரென நிகழ்ச்சிக்குள் நுழைந்தனர். “எங்களிடமும் கருத்து கேட்க வேண்டும்” என அறப்போர் இயக்க நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், மேடையில் இருந்த மேஜைகள் மற்றும் நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நிகழ்ச்சிக்கு அனுமதி பெறப்படாததால் கூட்டத்தை பாதியிலேயே ரத்து செய்தனர்.

தமிழ்நாடு டுடே, தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்: டி.என்.டி. அமல் ராஜ்

By TN NEWS