Thu. Nov 20th, 2025

 


திண்டுக்கல் மாவட்டம், பஞ்சம்பட்டி:
பஞ்சம்பட்டியில் மத கலவரத்தை தூண்டி, கிறிஸ்தவ மக்களுக்கு சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள பாஸ்கு மைதானத்தை அபகரிக்க முயலும் கும்பலை கண்டித்து, பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் இன்று பஞ்சம்பட்டி தேவாலயத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத ஒற்றுமையை சீர்குலைக்க முயலும் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிகழ்வில் பல கிராமங்களைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் பெருமளவில் திரண்டனர்.

செய்தியாளர் ராமர்

By TN NEWS