Thu. Nov 20th, 2025



செப்டம்பர் 1 — வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மேலாளத்தூர்–வளத்தூர் ரயில் நிலையம் இடையே ரூ. 35.99 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம்,
மேலும் மேல்பட்டி–வளத்தூர் ரயில் நிலையம் இடையே ரூ. 35.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலத்தை,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., பேர்ணம்பட்டு வட்டம் மேல்பட்டி–வளத்தூர் இடையே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை பார்வையிட்டு மரக்கன்று நடவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன், ஒன்றியக் குழு தலைவர் சத்யானந்தம், பேர்ணம்பட்டு ஒன்றியக் குழு தலைவர் சித்ரா ஜனார்தனன், குடியாத்தம் நகர மன்றத் தலைவர் எஸ்.சௌந்தரராஜன், வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் வத்சலா வித்யானந்தி, கோட்ட பொறியாளர்கள் சுந்தர், தனசேகரன், ஆதவன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உத்திரகுமாரி, மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

📸 செய்தி: குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS