Thu. Nov 20th, 2025



தர்மபுரி, அக்.29
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி 13வது வார்டில் கிராம சபை கூட்டம் 29.10.2025 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் திருமதி சாந்தி புஷ்பராஜ் அவர்கள் தலைமையேற்றார்.
கூட்டத்தில் பொதுமக்களின் குறைகள் கேட்டறியப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டன.

அதேவேளை, 13வது வார்டில் முக்கியமான பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் மக்கள் அமைதியாகவும் திருப்தியுடனும் வாழ்ந்து வருகிறோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை பேரூராட்சி தலைவர் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் 13வது வார்டு திமுக கிளைச் செயலாளர் திரு. மாது, திமுக நிர்வாகி பு. மதன்குமார், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மண்டல செய்தியாளர்: டி. ராஜீவ் காந்தி

By TN NEWS