Thu. Nov 20th, 2025



தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பொ. மல்லாபுரம் பேரூராட்சி 15ஆம் வார்டில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக சிறப்பு வார்டு கூட்டம் இன்று (29.10.2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் திருமதி சாந்தி புஷ்பராஜ் தலைமையிலும், வார்டு உறுப்பினர் திரு. ஏ. அஸ்லாம் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் உதவியாளர் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். பொதுமக்கள் சாலை வசதி, மின்விளக்கு அமைப்பு, குடிநீர் வழங்கல், சாக்கடை கால்வாய் அமைத்தல், பேரூராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் சார்பாக திரு. ஆசாம் கான், பேரூராட்சி சூப்பர்வைசர் ஜெயபால், காய் கடை மணிகண்டன், சைக்கிள் அலி, வெல்டிங் இலியாஸ், பீடா கடை பாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.

மண்டல செய்தியாளர்
டி. ராஜீவ் காந்தி

By TN NEWS