🚨 தமிழ்நாடு டுடே மீடியா நெட்வொர்க் – சிறப்பு செய்தி
🔴 மழைநீர் தேங்கல் – டெங்கு அபாயம் : வீராசாமி தெரு, கோரிமேடு, முள்ளிப்பாளையம் பொதுமக்கள் எச்சரிக்கை!
📍 வேலூர் மாவட்டம் – மாநகராட்சி 31வது வார்டு, வீராசாமி தெரு, கோரிமேடு, முள்ளிப்பாளையம்.
🎯 மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் நீண்டகால நீர் தேங்கல் – டெங்கு கொசு உற்பத்தி – பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ துரைமுருகன் (தமிழ்நாடு அரசு மூத்த அமைச்சர் – நீர்வளத்துறை) மற்றும் அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி எம்பி ஜெகத்ரட்சகன் பகுதிகளில், கடந்த காலங்களில் மழைநீர் அதிகமாக தேங்கி இருப்பதால், டெங்கு கொசுக்கள் குடியிருப்புப் பகுதிகளில் பரவி வருகின்றன.
மாநகராட்சி 31வது வார்டு, வீராசாமி தெரு, கோரிமேடு மற்றும் முள்ளிப்பாளையம் பகுதிகளில் நீர் வடிகால் இல்லாத காரணத்தால் நீண்டகால நீர் தேங்கி, குழந்தைகள், வயது பெரியோர் மற்றும் பொதுமக்களுக்கு சுகாதார அபாயம் அதிகரித்து உள்ளது.
இதன் விளைவாக, ராத்திரியில் விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகள் காணப்படும் இடங்களாக மாறி, பொதுமக்கள் நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
நகராட்சி செயலாளர்கள் மற்றும் மேயர் சுஜாதா உட்பட அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதிகளில் பாம்புகள் மற்றும் கொசு உற்பத்தி இடங்களை கண்காணித்து, நீர் தேங்கலை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பு மற்றும் டெங்கு தொற்று நோய்களை தடுக்கும் நோக்கில்,
முழுமையான கண்காணிப்பு
விஷப்பூச்சிகள் புழக்கத்தை அழிக்க,
நிலையான தண்ணீர் தேங்கும் நிலை,
என நடவடிக்கைகள் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பகுதியின் சமூக ஆர்வலர்கள், இளைய சமுதாய உறுப்பினர்கள் மற்றும் Senior Citizenகள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு வகையான கோரிக்கை வைத்தும் எந்த தீர்வும் எடுக்கப்படவில்லை.
📛எனவே, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒருமித்த குரலில் “தமிழ்நாடு டுடே செய்தியாளர் சந்திப்பில்” அரசுக்கு கோரிக்கையாகவும், உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.📛
💠“நிச்சயம் தமிழ்நாடு டுடே சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,” என்று தகவல் வெளியாகியுள்ளது.💠
🖋️ ஷேக் முகைதீன் – இணை ஆசிரியர்.
Tamilnadu Today Media Network – சிறப்பு செய்தி






