Thu. Nov 20th, 2025


🔴மக்கள் கோரிக்கை – நிர்வாகம் கவனத்திற்கு.🔴

📍 தென்காசி மாவட்டம்
🎯 ரேஷன் கடையை இரண்டாகப் பிரிக்க கோரி — ரேஷன் பொருட்களுடன் SDPI கட்சியினரின் புதுமையான மனு மாவட்ட ஆட்சியரிடம்!

தென்காசி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு, சொர்ணபுரம் பள்ளிவாசல் வளாகத்தில் இயங்கி வரும் ரேஷன் கடை (கடை எண்: DL005PN, கொடிமரம்-II) தற்போது 1800-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு சேவை வழங்கி வருகிறது.

அதிகமான கார்டுகள் இருப்பதால் பொதுமக்களுக்கு அரசு வழங்கும் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் கடுமையான சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த நேரத்தில் கடை திறக்கப்படாதது மற்றும் பொருட்கள் முழுமையாக வழங்கப்படாதது குறித்து மக்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.



♦️இதுகுறித்து துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு கடையை இரண்டாகப் பிரிக்குமாறு வலியுறுத்தி, SDPI கட்சியினர் ரேஷன் பொருட்களுடன் புதுமையான முறையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.♦️

இந்நிகழ்ச்சிக்கு SDPI 21வது வார்டு கிளைத் தலைவர் முகம்மது அசன் தலைமையில, மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது மஹ்மூத், மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், தொகுதி தலைவர் பீர்முகம்மது, தொகுதி அமைப்பு செயலாளர் அப்துல் காதர் (அபு), நகர செயலாளர் ஷேக் மைதீன், நகர இணைச் செயலாளர் ஜாஹிர் உசேன், நகர பொருளாளர் அகமது கபீர், கிளை நிர்வாகிகள் சுல்தான், ரஹ்மத்துல்லா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

🖋️ அமல்ராஜ்
மாவட்ட தலைமை செய்தியாளர் – தென்காசி

 

By TN NEWS