தருமபுரி மேற்கு மாவட்டம் – பாப்பிரெட்டிப்பட்டி:
தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றியம் சார்பில், பாப்பிரெட்டிப்பட்டி முருகன் கோயில் சமுதாய கூடத்தில் சிறப்பு சேர்க்கை விழா நடைபெற்றது.
இவ்விழாவை பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றிய கழக செயலாளர் சி. முத்துக்குமார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி. பழனியப்பன் M.Sc., Ph.D. அவர்கள் முன்னிலை வகித்தார்.
அ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, பூனையானூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்கள் கட்சிகளை விட்டு விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.
இந்நிகழ்வில் மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் அ. சத்தியமூர்த்தி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பாலமுருகன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சர்மா, துணை அமைப்பாளர் புகழேந்தி, ஐடி விங் சக்தி, ஆசைத்தம்பி, முகமது மிராசா, சாமி, கிளை கழக செயலாளர்கள் அமுதா, யுவராஜ், ரஜினி, ரத்திம், சங்கதமிழன், கோகுல், திருப்பதி, யோகேஷ், மணிகண்டன், நவீன்குமார், நிஷாந்த், மணிவண்ணன், ராஜன், ஜெயசூர்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சி. முத்துக்குமார் மற்றும் ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
📍மண்டல செய்தியாளர் : D. ராஜீவ் காந்தி
. 

