Thu. Nov 20th, 2025

குடியாத்தத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
அக்டோபர் 26 – குடியாத்தம்

குடியாத்தம் வட்டம் மூங்கப்பட்டு மதுரா காத்தாடி குப்பம் கிராமத்தில் இன்று காலை தொடர்ந்து பெய்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு அதிருப்தி தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும், அதிகாரிகள் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். ஜேசிபி மூலம் கால்வாய் அமைத்து, வீடுகளுக்குள் நீர் செல்லாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேற்படி இடத்தில் கால்வாயின் அருகே கிராமச் சாலை அமைந்துள்ளதால், குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பெருந்தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலரும், கிராம உதவியாளரும் கலந்து கொண்டனர். அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

📍 செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன் – குடியாத்தம் தாலுக்கா

By TN NEWS