அரூர், தருமபுரி மாவட்டம்:
தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் திரு ஆ. மணி, எம்.பி. அவர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ரெ. சதீஷ் அவர்களும் இன்று அரூர் சட்டமன்ற தொகுதி, அரூர் கிழக்கு ஒன்றியம், மாம்பட்டி பகுதியில் கணமழையால் ஏற்பட்ட சேதங்களை நேரில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது விவசாய பயிர்கள் மற்றும் சாலைகளில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விவசாயிகளிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டு, அவற்றை விரைவில் சீரமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
. 
இந்நிகழ்வில்:
உயர்திரு. அரூர் வருவாய் கோட்டாட்சியர்,
உயர்திரு. அரூர் நகராட்சி ஆணையாளர்,
உயர்திரு. அரூர் வட்டாட்சியர்,
மற்றும்
ஒன்றிய கழக செயலாளர்கள் கோ. சந்திரமோகன், வேடம்மாள், சௌந்தரராசா, ரத்தினவேல்,
அரூர் நகராட்சி துணைத் தலைவர் சூர்யா. D. தனபால்,
மாவட்ட அமைப்பாளர்கள் கு. தமிழழகன், கெளதமன், சிட்டிபாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெருமளவு பொதுமக்களும் இதில் பங்கேற்று, அதிகாரிகளிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
✍️ செய்தியாளர் : D. ராஜீவ் காந்தி
