வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் தமிழக அரசை கண்டித்து குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அக்டோபர் 22 | குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கைச் சுற்றியுள்ள விவகாரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட செயலாளர் பிரித்திவிராஜன் தலைமையேற்றார்.
மாவட்ட பொருளாளர் பஞ்சாட்சரம் முன்னிலை வகித்தார்.
நகரச் செயலாளர் தீனா (எ) தினகரன் வரவேற்புரையாற்றினார்.
அனிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கான ஆவணங்களை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதனை வழங்காமல் தாமதப்படுத்தும் தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டித்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
சுமார் 50க்கும் மேற்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் இதில் பங்கேற்று,
“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ உடனடியாக விசாரிக்க வேண்டும்!”
“கொலை வழக்கில் உள்ளவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது!”
எனக் கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் சுற்றுவட்டாரத்தில் பெருமளவு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இறுதியில் இளைஞரணி தலைவர் நவீன் நன்றி கூறினார்.
🖊️ செய்தி: கே.வி. ராஜேந்திரன்,
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
