Thu. Nov 20th, 2025

குடியாத்தம் வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் செயலிழப்பு நடவடிக்கை.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வன சரகர் அலுவலகத்தில் இன்று (16.10.2025) காலை நீதித்துறை நடுவர் உத்தரவின்படியும், வேலூர் வன கோட்ட அலுவலர் திரு. அசோக் குமார் மற்றும் வன பாதுகாவலர் அலுவலர் திரு. மணிவண்ணன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படியும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

காலை 10.00 மணியளவில் குடியாத்தம் வன சரகர் அலுவலர் திரு. பிரதீப் குமார் அவர்களின் தலைமையில், சென்னை வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் காவல் ஆய்வாளர் திரு. வாசுதேவன், செயலிழப்பு குழு பிரிவு அதிகாரி திரு. சி. சரவணன், குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி குழு, குடியாத்தம் அரசு மருத்துவமனைப் பிரிவு அலுவலர் திரு. சுப்பிரமணி, மோர் தானா பிரிவு வனவர் திரு. குமரேசன், குடியாத்தம் பிரிவு வனவர் திரு. ராதாகிருஷ்ணன், பரதராமி பிரிவு வனவர் மற்றும் சரக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் வன உயிரின குற்ற வழக்கு எண் 2/2025 (30.09.2025) தொடர்பான வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 15 நாட்டு வெடிகுண்டுகள் இன்று பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டன.

செயலிழப்பு நடவடிக்கையின் போது வெடிகுண்டுகள் மிகுந்த சத்தத்துடன் வெடித்து, வனப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. எந்தவிதமான மனிதர் அல்லது விலங்குகளுக்கும் சேதம் ஏற்படாமல் நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என வனத்துறையினர் தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

By TN NEWS