Tue. Jan 13th, 2026

அரூர் நூலகத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் சார்பில் 11ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி தொடக்கம்

தருமபுரி மாவட்டம், அரூர் —
அரூர் அரசு நூலகத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் சார்பாக 11ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி சிறப்பாக தொடங்கப்பட்டது.

இந்நிகழ்வில் நூலகர் கே. சின்னக்கண்ணன் தலைமையில நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் எஸ். இராசேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் கட்டுமான சங்க தலைவர் ஆர். நடராஜன், நூலக வாசகர் வட்ட தலைவர் இ.கே. முருகன், நூலகர்கள் தும்பாராவ், தீர்த்தகிரி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினர்.

அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அல்லி முத்து, செங்கொடி, கமலா மூர்த்தி, சிற்றரசு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாளர் சத்தியசீலன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

பல்வேறு வகை புத்தகங்கள், அறிவியல், இலக்கியம், சமூக மற்றும் வரலாற்று நூல்கள் அடங்கிய இந்தக் கண்காட்சி வாசகர்களுக்கு இலவச நுழைவுடன் திறந்துவிடப்பட்டுள்ளது.

செய்திகள்: பசுபதி

By TN NEWS