Tue. Jan 13th, 2026



அக் 16
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம்
கொண்ட சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட லெனின் நகர் கிருஷ்ணா கார்டன் சக்தி நகர் வள்ளலார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெளியேறவிலலை
அலுவலகத்திற்கும் மற்றும் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்புவதற்கும் பெரிதும் சிரமமாக உள்ளது என்று
அப்பகுதி பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

பொதுமக்கள் கூறுகையில் எங்கள் பகுதியில் தற்போது கடும் மழை பெய்து வருகிறது இதனால் எங்கள் பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது தண்ணீர் வெளியேற்றுவதற்கு போதுமான கால்வாய்கள் இல்லை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை பெரியவர்களும் வெளியே செல்ல முடியாமல் உள்ளோம்
என்று தெரிவித்தனர்

இது சம்பந்தமாக ஒன்றிய குழு பெருந்தலைவர் . சத்யானந்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா மற்றும் சரவணன்  காவல்துறையினர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர் இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

By TN NEWS