உத்திரமேரூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட செய்யாறு கிராமத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், நெய்யாடுபாக்கத்தில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
செய்யாறு கரையோரமாக அமைந்துள்ள வெங்கச்சேரி, நெய்யாடுபாக்கம், வயலக்காவூர், புல்லம்பாக்கம், காவாம்பயிர் ஆகிய கிராமங்கள், வாலாஜாபாத் செல்ல 15 கிலோமீட்டர் தொலைவில் ஆற்றை சுற்றி பயணிக்கின்றனர். இதனால், அங்கு வாழும் மக்களுக்கு அதிக நேர செலவும், பொருட்செலவும் ஏற்பட்டு வருகிறது.
இத்தகைய சிரமங்களை நிவர்த்தி செய்ய, நெய்யாடுபாக்கம் மற்றும் இளையனார் வேலூர் இடையே செய்யாறு ஆற்றின் மீது புதிய உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான கோரிக்கை மக்கள் முன்வைத்தனர்.
அந்த அடிப்படையில், 2024-25 நிதி ஆண்டில் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் ₹19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஏழு மாதங்களுக்கு முன் பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டது. புதிய பாலம் 300 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்கும்.
ஆனால், தற்போது, செய்யாறு ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், பாலம் கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பெ உலோகநாதன்
மாவட்ட நிருபர்/காஞ்சிபுரம் மாவட்டம்