Thu. Nov 20th, 2025



தருமபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி (NSS) திட்டத்தின் சிறப்பு முகாம் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2, 2025 வரை நடைபெற்றது.

இம்முகாமில் சிறப்பு விருந்தினராக அரூர் தீயணைப்பு நிலைய ஆய்வாளர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி, பேரிடர் காலங்களில் எவ்வாறு தங்களை பாதுகாப்பது என்பன குறித்து பயனுள்ள விளக்கமளித்தார். மேலும், நாட்டு நலப்பணி திட்டத்தின் நோக்கம் மற்றும் சமூக சேவையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.

இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியர் இரா. ஆறுமுகம் அவர்கள் தலைமை தாங்கினார்.
வரவேற்புரை திட்ட அலுவலர் இரா. கதிரேசன், வாழ்த்துரை இணை திட்ட அலுவலர் து. சக்திவேல், சிறப்புரை அரூர் தீயணைப்பு நிலைய ஆய்வாளர், நன்றியுரை பகுதி சேகர் ஆசிரியர் ஆகியோர் வழங்கினர்.

செய்திகள்: பசுபதி

By TN NEWS