குடியாத்தம், அக்டோபர் 12:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடைபெற்றது குறித்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செட்டிகுப்பம் பகுதியில் கிராமிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செட்டிகுப்பம் வன்னியர் வீதி பகுதியைச் சேர்ந்த சூர்யா (23) தந்தை அண்ணாதுரை, இரட்டை மாட்டு வண்டியில் மணலை சட்டவிரோதமாகக் கடத்தி வந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் மாட்டு வண்டியையும் அதில் இருந்த மணலையும் பறிமுதல் செய்து, சூர்யாவை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் கிராமிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📰 செய்தியாளர் : கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா
