Thu. Nov 20th, 2025



வேலூர் மாவட்டம், குடியாத்தம்:
காந்தி ஜெயந்தி முன்னிட்டு, குடியாத்தம் தாலுகா உள்ளி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வி. ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு கண்காணிப்பு மற்றும் பார்வையாளராக குடியாத்தம் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி கலந்து கொண்டார்.

கோட்டாட்சியர் சுபலட்சுமி, பொதுமக்களிடமிருந்து அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தேவையான வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்தார். மேலும் பொதுமக்களுடன் கனிவுடன் உரையாடி, அவர்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் ஆலோசனைகளையும் வழங்கினார்.

இக்கூட்டத்தில், பொதுமக்கள் முன்வைத்த அடிப்படை வசதிகள் தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வில் வட்டாட்சியர் பழனி, டி.எஸ்.பி சுரேஷ், காவல் ஆய்வாளர் விஸ்வநாதன், காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர் ஏழுமலை, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி, ஊராட்சி செயலாளர் சுரேஷ்பாபு, மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கிராம சபை கூட்டத்தை சிறப்பித்தனர்.

செய்தி: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

 

By TN NEWS