
பிரத்தியேக ஆடையில் புதுச்சேரி மதுபான கடத்தல்..!விழுப்புரம் போலீசார் அதிரடி — பெண்மணியை கைது செய்த வீர காவலருக்கு SP பாராட்டு!
விழுப்புரம்:
மாவட்டம் முழுவதும் நடைபெறும் மதுபானக் கடத்தல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், கிளியனூர் காவல் நிலைய போலீசார் திறமையான கண்காணிப்பின் மூலம் ஒரு அதிரடி சம்பவத்தை வெளிச்சம் போட்டுள்ளனர்.
கடந்த 08.10.2025 அன்று, கிளியனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அமுதா (48), துரோபதி அம்மன் கோயில் தெரு, T.பரங்கணி, வானூர் வட்டம் எனும் பெண், பேருந்தில் 58 புதுச்சேரி மதுபான பாட்டில்களை கடத்தி வந்துள்ளார்.

அதற்காக அவர் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடையில் சிறு சிறு பாக்கெட்டுகள் செய்து, பாட்டில்களை மறைத்து கடத்த முயன்றார். போலீசார் கண்காணிப்பின் போது இதை கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
போலீசாரின் திடீர் சோதனையில் அமுதா கைது செய்யப்பட்டு, மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தச் சிறப்பான பணிக்காக, முதல் நிலை காவலர் திரு. சத்யராஜ் அவர்களை, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் இ.கா.ப. அவர்கள் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
🖋️ V. ஜெய்ஷங்கர்
தலைமை செய்தியாளர், கள்ளக்குறிச்சி மாவட்டம்.
