Thu. Nov 20th, 2025



📍 குடியாத்தம், அக்டோபர் 10

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அனுமதியின்றி முரம்பு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் தலைமையில் போலீசார் சாமியார் மலை அடிவாரம் பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அனுமதி இல்லாமல் முரம்பு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் எந்திரம் பிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து,
பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த டிப்பர் லாரி ஓட்டுநர் குமார் (39) மற்றும்
காந்திநகர் முத்துமாரியம்மன் தெருவைச் சேர்ந்த பொக்லைன் ஓட்டுநர் உதயன் (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று நபர்கள் மீது போலீசார் தீவிரமாக தேடுதல் நடத்தி வருகின்றனர்.

📰 செய்தி: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்

By TN NEWS