திண்டுக்கல் மாவட்டத்தில், போலி NEET மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவக் கல்லூரியில் சீட் பெற்ற மாணவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழனி பகுதியைச் சேர்ந்த சொக்கநாதரின் மகள் காருண்யா ஸ்ரீதர்ஷினி (19), NEET தேர்வில் 228 மதிப்பெண் பெற்றிருந்தார். எனினும், 456 மதிப்பெண் பெற்றதாக போலி சான்றிதழ் தயாரித்து, திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி, சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ் போலி என்பதைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து மாணவி காருண்யா ஸ்ரீதர்ஷினி, அவரது தந்தை சொக்கநாதர், தாய் விஜய முருகேஸ்வரி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி ஆவணங்கள் வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
📰 செய்தி: சரவணகுமார்