
ஆறு இளைஞர்கள் கைது – ஒரு கிலோ கஞ்சா, 75 போதை மாத்திரைகள் பறிமுதல்…?
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம்:
கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காப்பக்காடு அருகே, விற்பனைக்காக கஞ்சா கைமாறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் (IPS) அவர்களின் உத்தரவின்படி, உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தா (IPS) அவர்களின் மேற்பார்வையில், கண்டாச்சிபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மூர்த்தி, உதவி ஆய்வாளர்கள் காத்தமுத்து, தீனதயாளன் மற்றும் காவலர்கள் இணைந்து ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அடுக்கம்–காப்புக்காடு அருகே, விக்கி என்ற நபர் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்தபோது, நான்கு சக்கர வாகனத்தில் வந்த மற்ற ஐந்து நபர்கள் கைமாறும் செயலில் ஈடுபட்டதை போலீசார் வலையில் சிக்கவைத்தனர்.
பிடிக்கப்பட்டவர்கள் –
விக்கி (விக்னேஷ், 24) – செஞ்சி மழவந்தாங்கல்,
குமார் (40) – அதே பகுதி,
வில்லியம் (25) – விக்கிரவாண்டி டட்நகர்,
பிளம்மிங் (23) – ஆயந்தூர்,
ஆகாஷ் (25) – ஆயந்தூர்,
மோகன்ராஜ் (24) – ஆயந்தூர்.
இவர்களிடமிருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள், 75 போதை மாத்திரைகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆறு பேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் துரிதமாகச் செயல்பட்டு, குற்றவாளிகளையும் பொருள்களையும் பறிமுதல் செய்த காவலர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் IPS அவர்கள் பாராட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📰 செய்திகள்: V. ஜெய்ஷங்கர்
தலைமை செய்தியாளர் – கள்ளக்குறிச்சி மாவட்டம்
