Thu. Nov 20th, 2025



🏗️ ஆசியாவின் மிகப்பெரிய அவினாசி சாலை மேம்பாலம் – ஜி.டி.நாயுடு அவர்களின் பெயரில்!

கோவை மாவட்ட மக்களுக்கு பெருமை சேர்த்த நிகழ்வு

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய அவினாசி சாலை மேம்பாலம், இந்தியாவின் எடிசன் எனப் போற்றப்படும் திரு. ஜி.டி.நாயுடு (G.D. Naidu) அவர்களின் பெயரில் பெயரிடப்பட்டிருப்பது, கோவையையும் தமிழ்நாட்டையும் பெருமைப்படுத்தும் வரலாற்றுச் சம்பவமாகும்.

இந்த பெருமைக்குரிய நிகழ்வை வணங்குகிறோம்… வரவேற்கிறோம்!

⚙️ ஜி.டி. நாயுடு – மெய்ப்பொருள் கண்டுபிடிப்பாளர்:

ஜி.டி. நாயுடு அவர்கள் 1893ம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி கோவை மாவட்டம் கலங்கல் கிராமத்தில் பிறந்தார். பிறந்தவுடன் தாயை இழந்த இவர், மாமா வீட்டில் வளர்ந்தார்.
அடிப்படை கல்வியை திண்ணை பள்ளியில் முடித்த இவர், கல்வியை முடிக்காமல் வாழ்க்கைப் போராட்டத்தில் இறங்கினார்.

மாதம் வெறும் ₹3 சம்பளத்தில் உணவகத்தில் பணியாற்றிய இவர், சேமித்த பணத்தில் பெட்ரோல் இயங்கும் இருசக்கர வாகனம் வாங்கியதோடு, தனது கண்டுபிடிப்பு திறமையால் உலகையே வியக்க வைத்தார்.


🚌 தென்னிந்தியாவின் முதல் பஸ்!

1920ஆம் ஆண்டு, மக்கள் மாட்டு வண்டிகளில் பயணித்த காலத்தில், ஜி.டி. நாயுடு அவர்கள் தானே வடிவமைத்த பேருந்தை பழனி–பொள்ளாச்சி வழித்தடத்தில் இயக்கினார்.
அதுவே தென்னிந்தியாவின் முதல் பஸ் சேவை என வரலாறு பதிவு செய்கிறது.

பின்னர் United Motor Service என்ற நிறுவனத்தைத் தொடங்கி, ஒரு பேருந்திலிருந்து 280 பேருந்துகளாக வளர்த்து, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இயக்கினார். தினசரி 10,000 பேர் இவரது பேருந்துகளில் பயணித்தனர்.

🏭 தொழில்துறையில் பெரும் மாற்றம்:

திருப்பூரில் பஞ்சாலை நிறுவிய இவர், தன்னுடைய உழைப்பால் கோடீஸ்வரராக உயர்ந்தார்.
ஆனால் கல்வி கிடைக்காத ஏழை மாணவர்களுக்காக பெரும் பணத்தை சமூக நலனுக்காக அர்ப்பணித்தார்.

பெண்கள் கல்வி முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில், 50 ஏக்கர் நிலத்தில் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி கட்டி அரசுக்கு தானமாக வழங்கினார்.
இன்றும் அது கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி (Women’s Polytechnic College) என விளங்குகிறது.


🏫 “நான் பெயரை வைக்காத கல்லூரி…”

இரண்டாம் உலகப்போரின்போது, அரசு பொறியியல் கல்லூரி கட்டும் முயற்சியில் ஈடுபட்டார். கவர்னர் ராபர்ட் அவர்களை சமாதானப்படுத்தி அனுமதி பெற்று, 100 ஏக்கரில் கல்லூரி கட்டினார்.
அதனை திறந்து வைத்த கவர்னர், கல்லூரிக்கு ஜி.டி.நாயுடு பெயர் வைப்பதற்கான அரசாணை வெளியிட்டார்.

ஆனால் நாயுடு அவர்கள், “என் பெயரை வைப்பீர்கள் என்றால் கல்லூரியை இடித்து தரைமட்டமாக்கிவிடுவேன்” என்று கூறி, அரசுக்கு தானமாக வழங்கினார்.
அதுவே இன்று Government College of Technology (GCT) எனப் பிரபலமாக விளங்குகிறது.


🌿 கோவை நகரத்தின் வளர்ச்சிக்கான தானம்:

இன்றைய மதிப்பில் ₹50,000 கோடி ரூபாய் மதிப்புள்ள
செம்மொழிப் பூங்கா, மத்திய சிறைச்சாலை உள்ளிட்ட 500 ஏக்கர் நிலங்கள் அனைத்தும் நாயுடு அவர்கள் அரசுக்கு இலவசமாக தானமாக வழங்கியவை.

அவரது தொழில்நுட்ப சாதனைகள் ஜெர்மனியில் நடைபெற்ற தொழில்நுட்பக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டபோது, ஹிட்லர் கூட அவரை பாராட்டியுள்ளார்.



🌟 “அந்த அதிசய மனிதருக்கே பொருத்தமான மரியாதை…”

அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, மனிதநேயம் ஆகிய துறைகளில் தமிழ் மக்களுக்கு முன்னோடி விளக்காக விளங்கிய ஜி.டி. நாயுடு அவர்களின் பெயரில் ஆசியாவின் மிகப்பெரிய அவினாசி சாலை மேம்பாலம் பெயரிடப்பட்டிருப்பது;


நியாயமான மரியாதை!

நெஞ்சை நிமிர்த்தும் நிகழ்வு!




✍️ தொகுப்பு கட்டுரை:
சேக் முகைதீன்
இணை ஆசிரியர்

 

By TN NEWS