Thu. Nov 20th, 2025

 

மௌலிவாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – 5 பேர் கைது!



சென்னை, அக்டோபர் 8:
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த இரு தனி வழக்குகளில் மொத்தம் 5 பேர் மௌலிவாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மௌலிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. லாரன்ஸ் அவர்களின் தலைமையில், உதவி ஆய்வாளர் திரு. திருவேங்கடம் மற்றும் காவலர்கள் ஜெயப்பிரகாசம், வெங்கடேசன், சதீஷ், சதீஷ்குமார் ஆகியோர் இணைந்து ரகசிய தகவலின் அடிப்படையில் விரைவான சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில்…?

🔹 முதல் வழக்கு:
எதிரிகள்:
A1. மிசேல்ராஜ் (53) காமரகம் என்பவரின் மகன்
A2. குமார் (43) மாதிவாணன் என்பவரின் மகன்
A3. மரிமுத்து (45) சின்னகவுண்டர் என்பவரின் மகன்
இவர்களிடமிருந்து 10 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

🔹 இரண்டாவது வழக்கு:
எதிரிகள்:
A1. சேகர் (54) கிருஷ்ணப்பா செட்டி என்பவரின் மகன்
A2. கவிதா (31) மணிகண்டன் என்பவரின் மனைவி
இவர்களிடமிருந்து 6 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இரு வழக்குகளிலும் கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்களுடன் எதிரிகள் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பின்னர் அவர்கள் திருப்பெருமந்தூர் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதேபோல், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி திருமதி ப்ரீத்தி அவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டு, எதிரிகளின் கடைகள் சீல் வைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

🖋️ செய்தியாளர்: உ. விக்னேஷ்வர்
📍சென்னை

By TN NEWS