Tue. Oct 7th, 2025



சோலார் மின் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் பதற்றம் – 80க்கும் மேற்பட்டோர் கைது

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் சோலார் மின் ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்திய போராட்டம் இன்று பதற்றம் ஏற்படுத்தியது.

தகவலின்படி, சோலார் மின் ஆலை திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என கூறி, 8க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, 50க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷங்கள் எழுப்பியதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அலுவலக வாயில் மூடப்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதி ஒருநேரம் பதட்டமாக காணப்பட்டது.
பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தகவல் & படம்: ஜெ. அமல்ராஜ்
மாவட்ட தலைமை நிருபர் – தென்காசி

By TN NEWS