திண்டுக்கல் மாவட்டம் – செய்தியாளர் ராமர்:
சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தாலே வேலை முடிந்துவிட்டது என்று பலர் நினைத்து விடுகிறார்கள். பத்திரம் கைக்கு வந்துவிட்டதே, இனி சொத்து நமக்கே சொந்தம் என்று எண்ணுவது தவறான நடைமுறையாகும்.
சொத்து உரிமையை உறுதி செய்யவும், சட்டரீதியாக தக்க வைக்கவும் பட்டா பெறுவது மிகவும் அவசியமானது. குறிப்பாக, ஒருவரிடமிருந்து முழுச் சொத்தை வாங்காமல் அதன் ஒரு பகுதியை மட்டும் வாங்கியிருந்தால், உடனடியாக பட்டா பெயர் மாற்றத்துக்கான விண்ணப்பத்தை செய்ய வேண்டும்.
உட்பிரிவு பட்டா (Subdivision Patta):
இத்தகைய சந்தர்ப்பங்களில், அந்த சொத்தின் முந்தைய உரிமையாளர் பெயரில் பட்டா தொடர்ந்தும் இருக்கும். நாம் வாங்கிய பகுதியில் தனித்தனி பட்டா பெற்றால்தான், உரிமை சிக்கலின்றி நிலையானதாகும். இதனை உட்பிரிவு பட்டா என்கிறார்கள்.
பட்டா பெறாமல் கால தாழ்த்தினால், நம்மால் வாங்கப்பட்ட பகுதி கூட முந்தைய உரிமையாளரின் பெயரிலேயே தொடரும். இதன் காரணமாக எதிர்காலத்தில் உரிமை பிரச்சினைகள், சட்ட சிக்கல்கள், கூடவே விற்பனை அல்லது கடன் பெறும் செயல்முறைகளில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
எனவே, பத்திரப்பதிவு செய்தவுடன், உடனடியாக பட்டா பெயர் மாற்றத்திற்கும் விண்ணப்பித்து, உரிமையை சட்டரீதியாக உறுதி செய்துகொள்வது ஒவ்வொரு சொத்து வாங்குபவரின் கடமையாகும்.
ராமர்
திண்டுக்கல் மாவட்டம் செய்தியாளர்.