வேலூர் மாவட்டம், குடியாத்தம் – அக்டோபர் 2:
குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில், நகர அ.தி.மு.க. அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா盛கமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை நகர கழக செயலாளர் அண்ணன் ஜே.கே.என். பழனி அவர்கள் முன்னெடுத்தார். விழாவில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் டி.வேலழகன் அவர்கள், ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகளுக்கு விலையில்லா சீருடைகளை வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர்கள் கஸ்பா ஆர்.மூர்த்தி, எஸ்.அமுதா சிவப்பிரகாசம், மாவட்ட பொருளாளர் காடை ஜி.பி.மூர்த்தி, ஒன்றிய செயலாளர் எஸ்.எல்.எஸ். வனராஜ், நகர மன்ற துணைத் தலைவர் எம்.பூங்கொடி, மூர்த்தி, ஏ.ரவிச்சந்திரன், வி.இ.கருணா, எஸ்.ஜே. அன்வர் பாஷா, பி.ராசி சதீஷ், மெடிக்கல் எஸ்.சரவணன், ஆர்.மகாலிங்கம், ஜி.தேவராஜ், எல்.ஏ.அன்பழகன், ஜெயமணி பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரைகள் வழங்கினர்.
மேலும், நகர மன்ற உறுப்பினர் கே.லாவண்யா குமரன், அண்ணா ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் ஏ.ராஜா, எம்.மேகநாதன், ஐ.சகாயராஜ், ஆர்.கண்ணன் உள்ளிட்டோர், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்