Sun. Oct 5th, 2025

செப்டம்பர் 30 – வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா:
பௌத்த ஆராய்ச்சி மையத்தில் தென்னாட்டு அம்பேத்கர் தளபதி எம். கிருஷ்ணசாமி ராவ் பகதூர், தந்தை சிவராஜ் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பௌத்த ஆராய்ச்சி மைய நிறுவனர் மனோகரன் தலைமை தாங்கினார். அம்பேத்கர் விழிப்புணர்வு சங்க செயலாளர் செல்வராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

இந்திய குடியரசுக் கட்சி மண்டல செயலாளர் இராசி தலித் குமார் தலை முறையின் மீதான பொறுப்பை வலியுறுத்தி, மறைந்த தலைவர்களின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், மாவட்ட அமைப்புச் செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் சரத் குமார் உட்பட பலர் கலந்து கொண்டு நினைவு வணக்கம் செலுத்தினர்.

📌 செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுக்கா

By TN NEWS